அமைச்சர்களுக்கான வாகன கொள்வனவு ரத்துச் செய்யப்பட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என ஜனாதிபதியும், பிரதமரும் வழங்கிய வாக்குறுதிக்கு என்ன நடந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர்கள் சிலருக்கு புதிய வாகனங்களை கொள்வனவு செய்வதற்கும், மேலும் சில அமைச்சர்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை புதுப்பிப்பதற்கும் செலவிடப்பட்ட 19 கோடியே 70 லட்சத்து 9 ஆயிரத்து 300 ரூபாவிலான மேலதிக தொகையொன்றைக் கோரி மேலுமொரு குறைநிரப்புப் பிரேரணையொன்று நேற்று அரசாங்கத்தால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், இது குறித்து தமது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே நாமல் ராஜபக்ச இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.