தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் சிம்பு. வருடத்திற்கு இரண்டு மூன்று படங்களையும் கொடுத்து வந்தார்.
வாலு, இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா, அஅஅ போன்ற படங்கள் ஓரளவு வசூல் கொடுத்தாலும், தற்போது சிம்பு சினிமாவை விட்டு செல்லும் நிலைமைக்கு வந்துள்ளார்.
இதற்கு எல்லாம் காரணம் ஆதிக் ரவிச்சந்திரனாம். இவரது இயக்கத்தில் வந்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் வசூல் கொடுத்தாலும், சிம்புவுக்கு எதிர்மறை விமர்சனத்தை ஏற்படுத்தியதோடு, ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
மேலும், அவரது மார்க்கெட் ரேட்டும் குறைய ஆரம்பித்தது. இதனை சிம்பு இப்போது தான் உணர்ந்திருக்கிறாராம்.
இதன் காரணமாக இனிமேஎல் நடிப்பதை விட்டுவிட்டு இயக்குனராக உருவாக இருக்கிறாராம். புதுமுக நடிகர்களை வைத்து படம் ஒன்றை சிம்பு இயக்கவுள்ளதாகவும், இந்தப் படத்தை அவரது தந்தை டி.ராஜேந்தர் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கெட்டவன், மன்மதன் மற்றும் வல்லவன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்பு தான் சிம்புவுக்கு கை கொடுக்கவில்லை. இந்த இயக்குனர் அவதாரமாவது அவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.