பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் விநியோகம் செய்வதால் 150 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் சொல்வது மனதுக்கு கஷ்டமாக உள்ளது. பிசினஸ் செய்பவர்கள்தான் நஷ்டம் என்னும் வார்த்தையை உபயோகிப்பார்கள். நாள் ஒன்றுக்கு 2 கோடி ரூபாய் காணிக்கையாய் வரும் செல்வச் செழிப்பான தெய்வீக திருத்தலம் திருப்பதி. தரிசனக் கட்டணம் 500, 1000 என்றாலும் பக்தர்கள் டிக்கெட் எடுக்க அலைமோதுகிறார்கள். வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள கோயில் பணத்திற்கு வட்டி கோடிக் கணக்கில் வருகிறது. தலைமுடி விற்பனயில் மட்டும் வருடந்தோறும் 200 கோடி ரூபாய் கிடைப்பதாக செய்தி. இப்படி எல்லா வகையிலும் கோயிலுக்கு வருமானம் வரும் போது நஷ்டம் என்று சொல்லலாமா? ஏதாவது பிசினஸில் பணத்தை முதலீடு செய்பவர்கள்தான் லாப நஷ்ட கணக்கு பார்ப்பார்கள். தேவஸ்தான நிர்வாகிகள் யாராவது தங்களுடைய சொந்தப் பணத்தை கோயிலுக்காக முதலீடு செய்துள்ளார்களா? அறிய ஆவல். திருப்பதி தேவஸ்தானம் ‘நஷ்டம்’ என்னும் வார்த்தையை பயன்படுத்தியது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.