பிழைப்பை தேடி தமிழகம் வந்தவர்கள் இங்கு வாழலாம், பணம் சம்பாதிக்கலாம் , ஆனால் எங்களை ஆள மட்டும் நினைக்கக் கூடாது ! சீமான் ஆவேசம்

ara

பிழைப்பிற்க்காக தமிழகத்திற்கு வந்தவர்கள் இங்கு வாழலாம், தொழில் புரியலாம், ஆனால் எங்களை ஆள நினைக்கக்கூடாது என்று நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கூறியுள்ளார்.

1996 ம் வருடம் முதல் ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேலாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா என்ற கேள்வி தமிழக மக்கள் மனதில் எழுந்துகொண்டு இருக்கிறது.

இந்நிலையில் திடீரென்று ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்து அரசியலுக்கு வருவது போல் தூபம் போட்டார்.

இதைத்தொடர்ந்து அவரை பிஜேபி, திருமாவளவன் போன்றவர்கள் வரலாம் என்றும் சீமான், அன்புமணி, வேல்முருகன், சுப்ரமணியசுவாமி போன்றவர்கள் கடுமையாக எதிர்த்தும் வருகிறார்கள்.

இந்நிலையில் சீமான் அளித்த ஒரு பேட்டியில், தமிழர்களை தமிழனே ஆளவேண்டும் என்ற இலட்சியத்தை நிறைவேற்றுவோம் என்று கூறினார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து பேசிய சீமான், பிழைப்பை தேடி தமிழகம் வந்தவர்கள் இங்கு வாழலாம், பணம் சம்பாதிக்கலாம் , ஆனால் எங்களை ஆள மட்டும் நினைக்கக் கூடாது என்றார்.