பெண்களே இது உங்களுக்கான எச்சரிக்கை பதிவு: காமக்கொடூரர்களின் அட்டூழியம்!

thu

முச்சக்கரவண்டியில் ஏறும் பெண்களை மயக்கமடையச் செய்து அவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் குழு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அவசர தேவையின் நிமித்தம் முச்சக்கர வண்டியில் தனியாக செல்லும் பெண்களை மயக்கமடையச் செய்யும் சம்பவம் அனுராதபுரத்தில் நடைபெற்றுள்ளது.

கெக்கிராவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மரதன்கடவல பிரதேசத்தை சேர்ந்த திருமணமான 42 வயதுடைய பெண் ஒருவர் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தில் குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்ப்பதற்காக அனுராதபுரம் நகரத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தத்திற்கு குறித்த பெண் முகம் கொடுத்துள்ளார்.

அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவரை பார்த்து விட்டு பஸ் நிலையத்திற்கு செல்லும் போது, இடையில் வந்த முச்சக்கர வண்டி ஓட்டுனர் அவரை பஸ் நிலையத்தில் விடுவதாக தெரிவித்து அவரை முச்சக்கர வண்டியில் ஏற்றியுள்ளார். பணமும் வேண்டாம் என குறிப்பிட்டு அவரை அழைத்து சென்றுள்ளார்.

சிறிது தூரம் சென்றவுடன் ஸ்ப்ரே போன்ற திரவம் ஒன்றை குறித்த முச்சக்கரவண்டி ஓட்டுனர் முச்சக்கர வண்டிக்குள் அடித்துள்ளார். அது மாத்திரமே அவருக்கு நினைவில் இருந்துள்ளது.

பின்னர் கண்விழித்து பார்க்கும் தான் அனுராதபுரம் ஏரிக்கு அருகில் இந்ததாகவும், தான் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

பெண்களை குறி வைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இது தொடர்பில் பெண்களை அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு நகரில் இவ்வாறான சம்பவங்கள் நடப்பதாக அமெரிக்கா தூதரம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

கொழும்பு செல்லும் வெளிநாட்டு பெண்கள் முச்சக்கரவண்டியில் பயணிக்கும் போது அவதானமாக செயற்படுமாறும், சாரதிகளால் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் உள்ளதாகவும் அமெரிக்க தூதரகம் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.