வனப்பகுதியில் கைது செய்யப்பட்ட தமிழர்கள்.. திடுக்கிடும் தகவல்

kaadu

ஆந்திர மாநிலம் கடப்பா வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக 6 தமிழர்களை அம்மாநில் போலீசார் கைது செய்துள்ளனர். செம்மரம் கடத்தியதாக கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆந்திராவில் தமிழர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். பண ஆசை காட்டி தமிழக எல்லை பகுதியில் உள்ள மக்களை சிலர் தவறாக பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

செம்மரம் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழகர்களை மீட்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த கடத்தலுக்கு பயன்படுத்திய கார் உத்தர பிரதேச மாநிலத்தின் பதிவு எண் கொண்டதாக உள்ளது. எனவே செம்மரம் உத்தர பிரதேச மாநிலத்திற்கு கடத்தப்பட இருந்ததா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆந்திர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.