தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடிச்ச கதாநாயகனாக இருப்பவர் தளபதி விஜய். அனைவரிடத்திலும் அன்பாக இருந்து தனது ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எங்கள் தளபதி.
கடந்த 2009ம் ஆண்டு இவர் நடித்த வில்லு படம் வெளிவந்தது. இந்தப் படத்திற்கு போட்டியாக சுராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த படிக்காதவன் படம் வந்தது.
அச்சமயம் விஜய் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிக்கொண்டிருந்த போது தனுஷ், அவருக்கு போன் செய்துள்ளார்.
அப்போது, அவரிடம் விஜய் பேசும்போது தனுஷ் கவலைப்படாம வாங்க சேர்ந்து மோதுவோம் என்று பெருந்தன்மையுடன் கூறியிருக்கிறார். அதற்கு பதில் அளித்த தனுஷ் அண்ணா நடுங்கிக்கிட்டே இருக்கேன் என்று பதில் கூறினாராம்.
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் கூட இவரது படங்களுடன் மோத பயப்படுவார்கள் என்பதற்கு இச்சம்பவம் சிறந்த உதாரணம்