விஐபி 2 படத்திற்கு ஏன் அனிருத் இசை அமைக்கவில்லை என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.
விஐபி படத்தின் விஸ்வரூப வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகமான விஐபி 2 படத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து வெளிவர தயாராக உள்ளது.
இந்நிலையில் விஐபி 2 படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது துனுஷ் கூறியதாவது:
விஐபி 2 படம் ஆணாதிக்க படமாக இருக்காது என்றும் விஐபி போன்றே இரண்டாம்பாகமும் இளைஞர்களை கவரும் வகையிலும், அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என்கிறார்.
தாயை இழந்த மகன் வாழ்கையில் சாதிக்க முயற்சிப்பதை முதல் பாகத்தில் கூறியிருந்தோம்.
விஐபி 2 -ல் வேலையை இழந்து திருமணமான இளைஞன் படும் துயரங்களை படமாக்கியுள்ளோம்.
இந்த படத்தின் அச்சாணியே கஜோல்தான். அவர் நடித்துள்ள கதாபாத்திரத்தை வேறு யாரும் நடித்திருக்க முடியாது. இந்த படத்தை தொடர்ந்து விஐபி 3 ம் வரும். அதிலும் கஜோல் நடிப்பார் என்று தனுஷ் நம்பிக்கை தெரிவித்தார்.
ஏன் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கவில்லை என்ற கேள்விக்கு, இளைஞனின் துடிப்பு மற்றும் உறுதியை காட்டுவதற்காக விஐபியில் அவரை ஒப்பந்தம் செய்தோம்.
ஆனால் விஐபி – 2 க்கு பொறுமை மற்றும் வாழ்க்கை தத்துவம் உணர்ந்த இசையமைப்பாளர் தேவைப்பட்டதால் ஷான் ரோல்டனை ஒப்பந்தம் செய்தோம் என்றார் தனுஷ்.