விஜய் டிவியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை, தடை செய்ய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்த நிகழ்ச்சி 15 பிரபலங்களுடன், நூறு நாட்கள் நடைபெறும். அதனை 100 கேமரா மூலமாக பதிவு செய்யப்பட்டு அவர்களது சுவாரஸ்யமான நடவடிக்கைகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது.
பெரிய அளிவில் எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு, கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.
குறிப்பாக, டி.ஆர்.பி. ஏற்றுவதற்காக போட்டியாளர்களுக்கிடையே போலியான சண்டையை முட்டிவிட்டு அழ வைப்பது.
பின்னர், போட்டியாளர்களுள் உள்ள சினிமா பிரபலம் ஒருவரை, இங்கு இருக்க பிடிக்கவில்லை, வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று அழ வைப்பது.
அந்த வீடியோவை திரும்ப திரும்ப போட்டு காட்டுவது என்று நிகழ்ச்சியில் வருவது எல்லாம் ரசிகர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இது தவிர, அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பை ஏற்படுத்த, ஒவ்வொரு நாளும் ப்ரோமோ வீடியோக்களையும் வெளியிடுகிறார்கள்.
அவற்றை பார்க்கும் போது, அதைவிட மொக்கையானது வேறு எதுவும் இருக்காது என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இப்படி அனைத்து தரப்பினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்ச்சியை உடனே நிறுத்துங்க. பழையபடி காமெடி ப்ரோகிராம் எதாவது பன்னுங்க என்கின்றனர் நெட்டிசன்கள்.