
நீந்துதல் என்பது மிகச் சிறந்த உடற்பயிற்சி என்று மருத்துவ உலகம் நாளுக்கு நாள் சொல்லிவருகிறது. நீந்தும்போது நமது நூற்றுக்கணக்கான கலோரிகள் கரைவதோடு தசைகளும் வலிமையடைகின்றன. அத்துடன் சுவாசமும் சீரானதொரு கொண்ணிலையை அடைந்து நுரையீரலும் இதயமும் ஆரோக்கியமடைகின்றன.
நீந்துவதில் யாருக்குத்தான் ஆசையில்லை? கடலில் நீந்தலாம்; குளத்தில் நீந்தலாம்; கேணியில் நீந்தலாம்; ஏன் கிணற்றிலும் நீந்தக்லாம். ஆனால் நீந்தத் தெரியாமல் எந்தவொரு நீர் நிலையிலும் இறங்கக்கூடாது.
நீந்துவதில் பல முறைகள் இருந்தாலும் சுழியோடும் முறை மிக முக்கியமான ஒன்றாகும். நீர் நிலையின் அடி ஆழம்வரை சென்று மீண்டுவருவதற்கு சுழியோடும் முறை உதவுகின்றது.
சுழியோடும்போது மூச்சைச் சமாளிப்பதுதான் மிக கவனமான ஒன்று. உரிய பாதுகாப்பான வழிமுறைகள் இல்லாமல் மூச்சை அடக்கி ஆழத்துக்குச் செல்லக்கூடாது.
ஒருவர் நீருக்கு அடியில் மூச்சை அடக்கும்போது என்ன நிகழ்கிறது?
நாம் மூச்சை அடக்கும்போது எமது குருதிக்குத் தேவையான ஒட்சிசன் வாயு கிடைக்காமல் போகிறது. ஒட்சிசன் வாயு குருதியைச் சுத்திகரிக்கும் முக்கியமான ஒரு மூலக்கூறாகும்.
இதனால் இரத்தம் சூடாகி இருதயம் வேகமாக இயங்க ஆரம்பிக்கும். மீண்டும் மீண்டும் ஒட்சிசனால் சுத்திகரிக்கப்படாத குருதியே உடலில் பரவுவதால் மூளை தனது சுய நினைவை இழக்கத்தொடங்கும். ஒருகட்டத்தில் முற்றாக சுய நினைவை இழந்ததும் மூச்சை அடக்கும் சக்தியையும் இழந்துவிடுகிறோம். அதனால் நீர் எமது சுவாசப் பையினுள் உள்ளெடுக்கப்பட்டு வேகமான மரணம் எம்மை அணைத்துவிடுகிறது.
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நீரின் ஆழம் அறியாமல் மூச்சை அடக்கும் விபரீத விளையாட்டில் ஈடுபடக்கூடாது. விரைவில் மேலே வந்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே இதனை மேற்கொள்ளவேண்டும்.