இலங்கைக்கு தனியாக செல்வாரா ரஜினி..

rajani

இலங்கை சென்று மீனவர்களை மீட்பாரா  என நடிகர் ரஜினிக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ரஜினி அரசியலுக்கு  வருப்போவதாக தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வந்தன. இவ்வாறு இருக்க ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சி ஓருங்கிணைப்பாளர் சீமான், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்த செய்தி வரத்தொடங்கியது முதலே அவரை கடுமையாக விமர்சிக்க தொடங்கிவிட்டார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. இதற்கிடையே அவர் வெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் பதிவு மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் கூறியதாவது, இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ள மீனவர்கள் நடிகர் ரஜினியால் மீட்க முடியுமா என சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த செய்தி  சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.