அதையும் தாண்டி தனித்தன்மையான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பவர்களால் மட்டுமே திரையுலகில் நீடிக்க முடியும். நான் 10 வருடங்களுக்கு மேல் சினிமாவில் இருக்கிறேன். திறமையான நடிகை என்று பெயர் வாங்கி இருக்கிறேன். நல்ல கதைகள் எனக்கு அமைந்ததால்தான் எனது திறமையை வெளிப்படுத்த முடிந்தது.
பாராட்டு, புகழ் கிடைக்கும்போது சில நடிகைகளுக்கு தலைக்கனம் வந்துவிடுகிறது. அப்படிபட்டவர்கள் சில நாட்களிலேயே ஓரம் கட்டப்பட்டு விடுவார்கள். தினமும் காலையில் படுக்கையில் இருந்து எழும்போது நான் யார்? பணம் புகழ் எல்லாம் என்ன? என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டு சிறிது நேரம் தியான நிலையில் இருப்பேன்.
அப்போது இவையெல்லாம் நிரந்தரம் இல்லை என்ற எண்ணம் எனக்குள் ஏற்படும். அதை உணர்ந்ததால்தான் படங்கள் வெற்றி பெற்று பாராட்டுகள் குவியும்போது தலைக்கனம் வராமல் இருக்கிறது. ஒவ்வொருவரும் நீங்கள் யார் என்பதை உங்களுக்குள்ளேயே கேளுங்கள். வாழ்க்கை என்ன என்பது புரியும்.
இதற்காக யாரிடமும் பயிற்சி எடுக்க தேவை இல்லை. சினிமாவில் போட்டி அதிகமாகி விட்டது. இங்கு திறமையான புதிய நடிகைகள் நிறையபேர் தினமும் வந்து கொண்டு இருக்கிறார்கள். திறமையை வளர்த்துக்கொள்பவர்கள் மட்டும் தாக்குப்பிடித்து நிற்கிறார்கள்.” இவ்வாறு தமன்னா கூறினார்.