விஐபி 2-ம் பாகம் மட்டுமல்ல 3-ம், 4-ம் பாகங்கள் வெளியாகும் : தனுஷ் அறிவிப்பு..,

vip-2

விஐபி 2-ம் பாகம் மட்டுமல்ல 3-ம், 4-ம் பாகங்கள் வெளியாகும் என நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.

தனுஷ், சமுத்திரகனி, அமலா பால் நடிப்பில் வெளியான் விஐபி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதே கூட்டணியில் உருவாகியுள்ள அதன் 2-ம் பாகம் தயாராகியுள்ளது.

இதில் பாலிவுட் நடிகை கஜோலும் சேர்ந்து நடித்துள்ளார். படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் தனுஷ் பேசியதாவது:

விஐபி படத்தின் இரண்டு பாகங்களும் அம்மா பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். இரண்டு பாகத்தோடு இது முடியாது.

தொடர்ந்து 3-ம் 4-ம் பாகங்கள் எடுக்கப்படும். அதே போன்றே ப.பாண்டி படமும் 2-ம் பாகம் எடுக்கப்படும்.

விஐபி 2-ம் பாகத்தின் டீஸர் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் எனது பிறந்தநாளான ஜூலை 28-ல் வெளியாவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

இவ்வாறு தனுஷ் பேசினார்.