வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஒவர் போட்டியில் இந்திய அணி தோற்றது குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-
பேட்டிங்கில் எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்தது. தினேஷ் கார்த்திக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடுவது அவசியமானது. நாங்கள் கூடுதலாக 25 முதல் 30 ரன்கள் வரை எடுத்து இருக்க வேண்டும். 230 ரன்கள் குவித்து இருக்க வேண்டும். எங்களது பவுலிங் தொடக்கத்தில் இருந்தே நன்றாக அமையவில்லை. பீல்டிங்கும் சரியில்லை. கேட்சுகளை தவறவிட்டதும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
வாய்ப்புக்களை தவற விடும் போது வெற்றி பெறுவதற்கு தகுதியான அணியாக நாம் இருக்க முடியாது.
ஒரு நாள் தொடரில் நாங்கள் நன்றாக ஆடினோம். ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோற்றோம். 20 ஓவர் போட்டியில் ஒரு ஆட்டத்தை வைத்து எதுவும் சொல்ல முடியாது. நாங்கள் வெஸ்ட் இண்டீசில் எப்போதுமே நன்றாகவே ஆடுகிறோம்.
கடந்த முறை டெஸ்ட் தொடரை வென்றோம். தற்போது மகிழ்சியுடன் நாடு திரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.