துவைத்த துணியை காய வைக்கும் போது இளம் ஆசிரியைக்கு நடந்த விபரீதம்!!!!

துவைத்த துணியை காய வைக்கும் தூணில் இருந்து மின்சாரம் தாக்கியதால் தற்காலிக ஆசிரியை விமலா பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே பெரியவிளை பகுதியில் வசித்து வரும் விரசுர பெருமாளின் 25 வயது மகள் விமலா.

இவர் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இரண்டு அண்ணன்கள், ஒரு தங்கையும் உள்ளனர்.

இந்நிலையில் தனது வீட்டு குளியலறையில் வழக்கம் போல் குளித்து விட்டு விமலா துணிகளை இரும்பு தகட்டினால் அமைக்கப்பட்ட கூரையில் உள்ள இரும்புதூணில் துணிகளை காய வைத்தபோது மின் கசிவு ஏற்பட்டுள்ளது.

அதில் ஈரத்துணிகளை காயப்போட வந்த விமலா மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் விமலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த கன்னியாகுமரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைப்பற்றப்பட்ட உடலை பிரேத பரிசோதனைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விமலாவின் இரண்டு அண்ணன்களில் ஒருவர் சமீபத்தில் உவரி சென்று திரும்பி வந்த போது இரு சக்கர வாகன விபத்தில் பலியாகி ஓராண்டே நிறைவாகும் நிலையில் விமலா உயிரிழந்திருப்பது குடும்பத்தினர் மத்தியிலும், கிராம மக்கள் மத்தியிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.