மேஷம்
மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர் கள். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புது வேலை அமையும். நெருங்கியவர்களை சந்தித்து எதிர் காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியா பாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
மிதுனம்
மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரு விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறை யாக பேசாதீர்கள். சந்தேக புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள்.
கடகம்
கடகம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள் வார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
சிம்மம்
சிம்மம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர் கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளு வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.
கன்னி
கன்னி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனை களை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.
துலாம்
துலாம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். அரசு அதிகாரி களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: குடும்பத்தில் உள்வர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக் கையை ஏற்பர். வெற்றி பெறும் நாள்.
தனுசு
தனுசு: இங்கிதமாக பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். கைமாற் றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.
மகரம்
மகரம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள்.
கும்பம்
கும்பம்: கணவன்-மனைவிக் குள் அனுசரித்து போவது நல்லது. சகோதர வகையில் மனவருத்தம் வரும். பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
மீனம்
மீனம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.