இருளில் யாழ். குடாநாடு

download (6)

யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காகவே இன்றைய தினம் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரை மின்சாரம் தடைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், நாவற்குழி, மறவன்புலோ, தச்சன் தோப்பு, தனங்கிளப்பு, கோகிலாக்கண்டி, கேரதீவு வீதி, அறுகுவெளி ஆகிய பகுதிகளில் குறித்த மின்தடை அமுலில் இருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்றைய தினமும் யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.