ஹைதராபாத் – கொழும்பு ஆகிய நகரங்களுக்கு இடையில் தொடர் விமான சேவையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளதாக
ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தை (RGIA) இயக்கும் ஜி.எம்.ஆர் ஹைதராபாத் சர்வதேச விமான நிலைய நிறுவனம் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு சேவையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வழங்கவுள்ளது. அதற்கமைய திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இந்த விமானங்கள் சேவையில் ஈடுபடும்.
சர்வதேச இணைப்புகளை விரிவுபடுத்துவதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவையை இணைந்து கொள்வது குறித்து மகிழ்ச்சியடைவதாக ஜி.எம்.ஆர் ஹைதராபாத் சர்வதேச விமான நிலைய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி SGK Kishore தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புதிய சேவையானது தெற்கு மற்றும் மத்திய இந்திய பிராந்தியத்திலிருந்து 13 நீர்த்தேக்க நகரங்களின் பயணிகளின் பயணங்களை மேற்கொள்ள உதவியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து பெரும்பாலான சுற்றுலா பயணிகள் 1,600 கிலோ மீற்றர் நீளமான கடற்கரை, வளமான கலாச்சாரம் மற்றும் குறிப்பாக மத மற்றும் புராண முக்கியத்துவம் வாய்ந்த பெரிய இதிகாச இராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களைக் காண இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றமையினால் இந்த விமான சேவை மிகவும் உதவியாக இருக்கும் என குறிப்படப்பட்டுள்ளது..