க்ளைபோசெட் இரசாயனம் பயன்படுத்தப்படுவதனை எதிர்க்கின்றோம் : திகாம்பரம்

download (7)

க்ளைபோசெட் என்னும் தடை செய்யப்பட்ட விவசாய இரசாயனம் பயன்படுத்தப்படுவதனை எதிர்ப்பதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள க்ளைபோசெட் என்னும் விவசாய களை நாசினியை பெருந்தோட்டப் பகுதிகளில் விநியோகம் செய்ய அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவர் முயற்சிக்கின்றார்.

மலையகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் குறித்த அமைச்சரின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.

க்ளைபோசெட் இரசாயனம் சிறுநீரக நோய்களுக்கு வழியமைக்கும் ஓர் இரசயானமாகும்.

இந்த இரசயானத்தை இலங்கைக்கு கொண்டு வரக் கூடாது என ஜனாதிபதி தடை விதித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் அமைச்சர் ஒருவர் குறித்த இரசாயனத்தை இறக்குமதி செய்து தேயிலை தோட்டங்களில் பயன்படுத்த முயற்சித்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.