ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு இரட்டைக் குடியுரிமை?

download (8)

இரட்டை குடியுரிமை தொடர்பிலான விசாரணைகள் தொடாச்சியாக முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பீ. நாவீன்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் சிலர் இரட்டைக் குடியுரிமை கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இவ்வாறு இரட்டைக் குடியுரிமையுடன் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் நபர்கள் யார் என்பது குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் இடை நிறுத்தப்படவில்லை எனவும் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரட்டை குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வாய்மொழி மூலம் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

எனினும் இது தொடர்பில் எழுத்து மூலமான ஆதாரங்களுடன் இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை.

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு இரட்டைக் குடியுரிமை காணப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த தகவல்கள் உண்மையானதா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அமைச்சர் நாவீன்ன தெரிவித்துள்ளார்