பூனை ஒன்றை பாதுகாக்கும் நாய்! நெகிழ வைக்கும் தாய்ப்பாசம்

dog

பிறந்தவுடன் குழந்தைகளை குப்பையில் வீசும் தாய்களை கொண்ட இந்த யுகத்தில் தனது இனத்திற்கு சொந்தமற்ற தாய் இல்லாத பூனைக்கு நாய் ஒன்று தாயாகியுள்ளது.

இந்த நாய், பூனைக்கு பால் கொடுத்து வளர்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாய் பாசத்திற்கு ஏங்கும் பூனை இந்த நாயிடம் பால் குடிக்கும் காட்சி பார்ப்பவர்களின் கண்களுக்கு கண்ணீரை வரவைக்கும் வகையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கத்தேகம பகுதியை சேர்ந்த சீதா வாசலகே என்பவரின் வீட்டிலேயே இந்த காட்சியை காண முடிந்துள்ளது.