மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மதப்பிரிவினைச் செயற்பாடுகள் ஆரோக்கியமானவையல்ல என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், “மனிதரில் மனித நேயக் கோட்பாடுகளை மனிதாபிமான முறையுடன் இறை பகிர வேண்டியதே சமய நல்லொழுக்க சித்தாந்தம்.
மாறாக சமூக பிறழ்வுகளுக்கு வழி தேடுகின்ற மார்க்கமாக மத நிந்தனைகளை முன் நிறுத்துவது மனித மாண்பு கடந்த செயலாகும். சாதாரண அப்பாவி மக்களை ஏவி விடுவது மனித மத விழுமியங்களுக்கு முற்றிலும் எதிரான செயற்பாடாகும்.
எனவே மனிதர்கள் மீதுள்ள முரண்பாடுகள் இறை சிலைகளை தகர்ப்பதன் ஊடாக வெளிப்படுத்த முனைவது மனிதர்களின் இழி நிலைச் செயலாகும்” என வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.