இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு கொடுப்பனவு இனிவரும் காலத்தில் டிஜிட்டல் முறைமை ஊடாக வழங்கப்படவுள்ளது.
இந்தச் செயற்றிட்டம் எதிர்காலத்தில் அவர்களின் கையடக்கத் தொலைபேசி ஊடாக பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி இருபதாயிரம் ரூபா பெறுமதியான போஷாக்குக் கொடுப்பனவு கர்ப்பிணிகளுக்குக் கிடைக்கப் பெறும்.
இதற்கு முன்னர் அவர்கள் பிரதேச செயலகம் ஊடாக மாதாந்தம் இரண்டாயிரம் ரூபா வீதம் பெற வேண்டியிருந்தது. ஆனாலும் கர்ப்பிணிகளின் சிரமத்தினைக் கருத்திற்கொண்டு கையடக்கத் தொலைபேசி மூலம் குறித்த தொகைக்கான வவுச்சரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.