மக்கள் விருப்பத்திற்கு இணங்க புதிய அரசியலமைப்பில் தேர்தல் முறை மாற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.
தெஹியத்த கண்டிய மகாவலி சாலிகா மண்டபத்தில் இடம்பெற்ற நிழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.
இதன்போது, புதிய அரசியலமைப்பில் ஒற்றை ஆட்சியில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படாது என்பதை தெளிவுபடுத்திய ஜனாதிபதி, பௌத்த மதத்தின் முன்னுரிமைக்கு எவ்வித பங்கமும் ஏற்படுத்தப்படாது என்றும் உறுதியளித்துள்ளார்.
குறிப்பாக பௌத்த மதம் தொடர்பான அத்தியாயங்கள் மாற்றம் செய்யப்படாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எதிர்பார்ப்புகள் உள்ளன. மக்கள் தமது ஒவ்வொரு தொகுதிக்கும் தனியான பிரதிநிதி தேவை என்று கருதுகின்றனர். எனவே புதிய அரசியலமைப்பில் புதிய தேர்தலுக்கு முன்னுரிமை கொடுக்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.