லண்டனில் வாகனத்துடன் எரிந்து தமிழர் ஒருவர் பலி

லண்டனில் வாகனம் ஒன்றில் தீடிரென தீ பரவியுள்ளதுடன், இதில் இருந்த இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றுமுன் தினம் இரவு இடம்பெற்றதுடன், இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த லண்டன் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போதும் வாகனத்தின் உள்ளே இருந்த நபரை காப்பாற்ற முடியவில்லை என கூறப்படுகின்றது.

அத்துடன், தீ விபத்தில் யாழ்ப்பாணம் அளவெட்டியை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ் என்பவரே உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.