நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் வழியாகவே, அருகில் உள்ள அண்ணா நகர் கிராமத்தை சேர்ந்த மக்கள் சென்று வந்துள்ளனர்.
ஆனால், எஸ்டேட்டை ஜெயலலிதா வாங்கிய பிறகு அனுமதி மறுக்கப்பட்டு, பாதைகள் அடைக்கப்பட்டது.
இதனை எதிர்த்து அப்பகுதியை சேர்ந்த திமுக உறுப்பினரும், ஊராட்சி மன்றத் தலைவருமான பொன்தோஸ் வழக்கு தொடுத்திருந்தார்.
ஜெயலலிதாவை எதிர்த்து வழக்கு தொடுத்திருப்பதால், திமுக தலைவர் கருணாநிதி நேரில் அழைத்து பேசுவார்.
ஆனால், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சமீப காலமாக பொன்தோஸை அழைத்து பேசுவதில்லை.
இந்நிலையில், ஜெயலலிதா இறந்த பிறகு ஸ்டாலினை சந்தித்த பொன்தோஸ், கொடநாடு எஸ்டேட்டின் பழைய ஓனர் ஆதரவாக இருப்பதாகவும், அதனால் தலைமை அறிக்கை விட்டால், பாதையை மீட்டு விடலாம் என்று கூறியுள்ளார்.
அதற்கு அவசரப்பட வேண்டாம். பொருமையாக செயல்படுவோம் என்று கூறி ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளாராம்.
அதன்பின்னர் எந்த அழைப்பும் வராததால், கருணாநிதியின் பிறந்தநாள் அன்று வந்த பொன்தோஸ், ஸ்டாலினை சந்திக்க முயற்சித்திருக்கிறார்.ஆனால், ஸ்டாலின் பிஸியாக இருப்பதாக தலைமை கூறியுள்ளனர்.
இதனால் கோவத்தோடு தலைவர் நலமாக இருந்திருந்தால் என்னை எப்படி கவனிப்பார் என்று கேட்டு பாருங்கள் என்று கூறிவிட்டு சென்று விட்டாராம்.
இந்த தகவல் ஸ்டாலின் காதுக்கு சென்றதால், உடனே பொன்தோஸை பார்க்க வேண்டும், வரச்சொல்லுங்கள் என்று உதவியாளரிடம் கூறியுள்ளார்.
ஆனால், நான் கிளம்பி தாம்பரம் தாண்டி சென்றுவிட்டேன், இனி திரும்பி வரமுடியாது என்று பொன்தோஸ் பளிச்சென்று கூறிவிட்டாராம்.
இதுகுறித்து கொடநாடு எஸ்டேட் பகுதி திமுகவினர் கூறுகையில், கொடநாடு எஸ்டேட்டை வைத்தே தற்போது அரசியல் நகர்கிறது. எஸ்டேட் விஷயத்தில் நாங்களே பயப்படாம இருக்கிறோம்.
ஆதாரம் இருந்தும் அதை பயன்படுத்தாமல் அலட்சியமாக இருக்கிறார். இப்படியே சென்றால், எல்லோரும் கட்சியை விட்டு செல்ல வேண்டியதுதான் என்று புலம்பியுள்ளனர்.