கைதாகிறார் கமல்… தீவிர ஆலோசனையில் போலீஸ்… அதிர்ச்சியில் ரசிகர்கள்

kamal

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்து, அதன் தொகுப்பாளர் கமலஹாசனை கைது செய்ய இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர்கள் கொடுத்துள்ள புகாரில் சமூகத்தை சீரழிக்கும் இத்தகயை நிகழ்ச்சியை தடைசெய்ய வேண்டும் என  குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்தாய் வாழ்த்தை கேலி செய்யும் வகையில் நிகழ்ச்சி இருந்ததாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து மக்கள் கட்சியின் இந்த புகார் குறித்து போலீசார் தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக பல்வேறு தரப்பினரின் கருத்துகள் தொடர்ந்து சமூகவலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.