பொலித்தீன், ரெஜிபோம் மற்றும் சொப்பிங் பை (shopping bag) ஆகியவற்றின் பாவனைக்கு மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை தடை விதித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதிமுதல் அமுலுக்கு வரும் வகையில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இன்றைய அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத நிலையில், உக்காத இவ்வகையான பொருட்களால் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. இவற்றை கருத்திற்கொண்டே மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை இத் தீர்மானத்தை எடுத்துள்ளது.