ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி

neer

வெலிமடை – உமா ஓயா ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டரை வயது குழந்தையான தங்கராஜா லீலி மற்றும் அவரது தாய் கருப்பையா சுப்பிரமணியம் மற்றும் பாட்டியான ராமையா கருப்பையா ஆகியோரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் மொறகொல்ல பகுதியில் வசிக்கும் தமிழ் குடும்பம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் இன்று காலை 10 மணியளவில் குளிக்கச் சென்ற போதே 50 அடி ஆழத்திலுள்ள அகழியொன்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.