சர்ரேயில் வைப்ரிட்ஜ் நகரிலுள்ள மூன்று மாடி வைத்தியசாலை கட்டடத்தில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு குறித்த தீ விபத்து சம்பவித்திருந்த நிலையில், அனர்த்தத்தையடுத்து வைத்தியசாலையை அண்மித்த பகுதிகளிலுள்ள மக்கள் அங்கிருந்து பாதுகாப்பு நிமித்தம் வெளியேற்றப்பட்டு புனித ஜேம்ஸ் தேவாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வைத்தியசாலையானது பகல் வேளைகளில் மாத்திரம் இயங்குகின்ற நிலையில், திடீரென பரவிய தீயினால் எவ்வித உயிராபத்துக்களும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், தீ விபத்தில் குறித்த வைத்தியசாலை கட்டடமானது மீண்டும் திறக்கப்பட முடியாதளவிற்கு கடுமையாக சேதமடைந்துள்ள வைத்தியசாலை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சர்ரே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.