தமிழர் உலகையே ஆண்ட மூத்தகுடி என்பதற்கு மற்றுமொரு ஆதாரம்!

dd

“டௌமாடாபாகாடானிஹனகொர்வொகோர்டமடெயடுரீபுகபிகிமொங்கஹொரொனுகுபொகயீபெநுவக்கிடனதஹு” இது ஒரு ஊரின் பெயர்.

என்னது.. இது ஒரு பெயரா அதுவும் ஊரின் பெயரா என்று நீங்கள் வியந்து முடிப்பதற்குள் இன்னொரு தகவலும் உங்களுக்காக,  நியூசிலாந்தில் உள்ள இந்த ஊருடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் நமது முன்னோரான தமிழர்கள்.

அந்த ஊரைப்பற்றி அறிந்து  கொள்ள ஆர்வமாக உள்ளதுதானே, தொடர்ந்து படியுங்கள்..

”டௌ-மா-டா-பா-கா-டா-னி-ஹ-ன-கொர்-ஒ-ஒர்-ட-ம-டெ-அ-டு-ரீ-பு-க-பி-கி-மொங்க்-அ-ஹொ-ரொ-னு-கு-பொ-க-ஈ-பெநு-அக்கி-ட-ன-த-ஹு” என்று உச்சரிக்கப்படும் இந்த மலை, நியூசிலாந்தின் தெற்கு “ஹாக்ஸ் பே”-ல் உள்ள வெயுபுகுருவின் தென்பகுதியில், பொரங்காஹூவுக்கு அருகே உள்ள ஒரு மலை.

இந்த மண்ணோடு நெருங்கிய தொடர்புடைய மாவோரி இன மக்களின் நீண்ட நெடும் வரலாற்றை தன் நீண்ட பெயரில் மட்டுமில்லாமல் ஒவ்வொரு  பாறைகளிலும் தாங்கி நிற்கிறது இந்த ஊர்..

இது வெறும் “மாவோரி” என்ற நாம் அறியாத இனத்திற்கான வரலாற்றை மட்டுமல்ல நமது தமிழ் முன்னோர்களையும் இப்பகுதியின்  மாவோரி மக்களோடு அவர்கள் கொண்டிருந்த வணிகத் தொடர்பு வரலாற்றையும்  தாங்கி நிற்கிறது.

மாவோரிகள் (Māori) எனப்படுபவர் நியூசிலாந்து நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்கள். இவர்கள் கிழக்கு பொலினீசியாவிலிருந்து வந்தவர்கள். இவர்கள் மாவோரி என்ற சிறப்புமிக்க மொழியைப் பேசுகிறார்கள், இம் மொழியிலேயே  இம்மலைக்கு இத்தகைய நீண்ட பெயர் சூட்டப்பட்டுள்ளது.

19 நூற்றாண்டில் ஐரோப்பியர்களின் வருகையால் மாவோரி அரசுகள் வீழ்ச்சியடைந்தன. ஐரோப்பியர்கள் வாயிலாகப் பரவிய புதிய வகை நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி இல்லாமையால் மாவோரிகளின் மக்கள்தொகை 1840 இற்குப் பிறகு பெருமளவு குறைந்தது.

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து மீண்டும் மாவோரிகளின் எண்ணிக்கை கூடத்தொடங்கியது. 1960 களிலிருந்து மாவோரி சமூகத்திலும் பண்பாட்டிலும் மறுமலர்ச்சி ஏற்பட்டது. மாவோரி இனமக்களின் இந்த சமூக பண்பாட்டுமாற்றமே இன்று உலகம் முழுவதும் இந்த இன மக்கள் பரவ காரணம்

மாவோரிகள் தங்களது முன்னோர்கள் கடல் கடந்து பல பயணங்கள் மேற்கொண்டதாக கூறுவர். இதே கருத்துக்கள் மற்ற பாலினேசிய பழங்குடிகளுக்கும் உண்டு. இம்மாவோரி மக்கள் தமிழ் மக்களுடனும் தொடர்பில் இருந்தமைக்கு பல்வேறு ஆதாரங்கள் கிடைக்க பெற்றுள்ளன. குறிப்பாக இம்மாவோரிகள் பேசும் மாவோரி மொழிக்கும் தமிழுக்கும் பலவித் தொடர்புகள் உள்ளதாக டெய்லர் என்னும் பாதிரியார் கண்டறிந்துள்ளார். இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வெண்கல மணி ஒன்று நியுசிலாந்து கரியோரா கிராமத்தில் கண்டறியப்பட்டது. இம்மணியைக் கொண்டு வந்த கப்பல் தேக்கு மரத்தால் செய்யப்பட்டது. இதனால் கடல் கடந்து தன் முன்னோர்கள் பயணித்ததாக கூறும் மாவாரிகளுக்கும் தமிழ் மணி நியுசிலாந்தில் கிடைத்துள்ளதால் தமிழருக்கும் அதிக தொடர்புண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

”டௌ-மா-டா-பா-கா-டா-னி-ஹ-ன-கொர்-ஒ-ஒர்-ட-ம-டெ-அ-டு-ரீ-பு-க-பி-கி-மொங்க்-அ-ஹொ-ரொ-னு-கு-பொ-க-ஈ-பெநு-அக்கி-ட-ன-த-ஹு” என்று உச்சரிக்கப்படும் இந்த மலை 305 மீட்டர் (1,001 அடி) உயரம் உடையது .இந்த மலையின் நீண்ட பெயரானது இது சுருக்கமாக “டாமதேயா” என சுருக்கப்படுகின்றது. டாமதேயா என்னும் பெயர்  நில ஆராய்ச்சியாளர் ஒருவரை குறிப்பதாக கூறப்படுகின்றது

டாமதேயா நியூசிலாந்தின் மிகப்பெரிய ஆராய்ச்சியாளர்களில் ஒருவராக இருந்தார், மேலும் அவர் “மாவோரி மார்கோ போலோ” என்றும் புகழப்படுகிறார்.. அவர் வட மற்றும் தென் தீவுகளை சுற்றிச் சுற்றித் திரிந்தார் எனவும் குறிப்புகள் கிடைகின்றன.

வெஸ்ஸஸ் நியூசிலாந்து கையேடு மற்றும் தி நியூசிலாந்து ஹெரால்டு புத்தகம் ஆகியவற்றின் படி இந்த மலை , உலகில் எந்த ஆங்கில மொழி பேசும் நாட்டிலும், இரண்டாவது மிகப்பெரிய இடத்தின் பெயராக கருதப்படுகிறது.மலையின் பெயர் (ஆங்கிலத்தில் 105 எழுத்துகளுடன்) கின்னஸ் உலக சாதனைகளில் மிக நீண்ட இடமாக பெயரிடப்பட்டுள்ளது.

திரைகடலோடித் திரவியம் தேடிய தமிழர்களின் வேர்கள் உலக நாடுகள் அனைத்திலுமே பரவியிருக்கிறது என்பதற்கான சான்றாகவே இதனைப் பார்க்கலாம்.