13.07.2017 இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷம்: திர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர்.வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். இடமாற்றம், ஊர்மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும்.

ரிஷபம்

ரிஷபம்: யோகமான நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் எண்ணம் ஏற்படும். எதிர்பாராத தனலாபம் உண்டு.

மிதுனம்

மிதுனம்: தொட்டகாரியம் வெற்றி பெறும் நாள். தொழில் சம்பந்தப்பட்ட புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கை பிடிப்போடு செயல்பட இயலும். வருமானம் திருப்தி தரும்.

கடகம்

கடகம்: வசர முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டிய நாள். அதிக விரயங்கள் ஏற்படலாம். கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. கொடுக்கல் வாங்கல்களில் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும்.

சிம்மம்

சிம்மம்: ட்பால் நன்மை கிட்டும் நாள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுவது நல்லது. கூட்டுத் தொழிலில் மாற்றம் ஏற்படும். உடல் நலனில் அச்சுறுத்தல் தோன்றும். கடன் சுமை கூடும்.

கன்னி

கன்னி: னிமையான நாள். திருமண வாய்ப்புகள் கைகூடி வரலாம். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும். நண்பர்கள் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்துதவ முன்வருவர்.

துலாம்

துலாம்: நெருக்கடிகள் அகலும் நாள். நிழல்போல தொடர்ந்த கடன் சுமை குறையும். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். பெண் வழி பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். வியாபார விருத்தியுண்டு.

விருச்சிகம்

விருச்சிகம்: நினைத்தது நிறைவேறும் நாள். வருமானம் இருமடங்காகும். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற நண்பர்கள் கைகொடுத்துதவுவர்.

தனுசு

தனுசு: வாரிசுகளால் அனுகூலம் ஏற்படும் நாள். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். மனையில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர்.

மகரம்

மகரம்: விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். ஏட்டிக்கு போட்டியாக செயல்பட்டவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். நீண்ட நாளைய பிரச்சினையொன்று சுமுகமாக முடியும். தொழில் முன்னேற்றம் உண்டு.

கும்பம்

கும்பம்: ணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும். பிறருக்காக பொறுப்புச் சொல்லி வாங்கி கொடுத்த தொகை வந்து சேரும்.

மீனம்

மீனம்:ண்பர்கள் உதவியால் நலம் காணும் நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பதன் மூலம் பகை மாறும்.