ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பங்களாதேஷிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹசீனாவின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார்.
இரண்டு நாள் விஜயத்தின் போது பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷ் பிரதமர் வெளிவிவகார அமைச்சர் சுகாதார அமைச்சர் சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவி உள்ளிட்டவர்களுடனும் ஜனாதிபதி சந்திப்பு நடத்தவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கல்வி, கலாச்சாரம், கடற்துறை, சுகாதாரம், சுற்றுலாத்துறை உள்ளிட்டவை தொடர்பில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.