மாணவ மாணவியர் கைகளை அறுத்துக் கொண்டதுக்கான காரணம் வெளியாகியது.!

www.gossip99.com (2)

பொல­ன­றுவை மெதி­ரி­கி­ரிய கல்வி வல­யத்­திற்கு உட்­பட்ட ஒரு பாட­சா­லையில் 41 மாணவ, மாண­விகள் தமது கைகளை வெட்டிக் கொண்­டி­ருந்த நிலையில் பொலிஸார் பொறுப்­பேற்று பொலிஸ் நிலை­யத்­திற்கு அழைத்துச் சென்­றுள்­ளனர்.

இச்­சம்­பவம் நேற்று முன் தினம் இடம்­பெற்­றுள்ள நிலையில் பிர­தே­சத்­துக்கு பொறுப்­பான உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் திஸ்ஸ லால் டி சில்வாவின் கீழ் சம்­பவம் தொடர்பில் விஷேட விசா­ரணை ஒன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

போதைப்­பொருள் ஒன்றை பயன்­ப­டுத்­திய மாண­வர்கள் அதன் தாக்­கத்தால், தமது கைகளில் பிளேட்­டாலும், சட்டைப் பின்­க­ளாலும் வெட்டிக் கொண்­டுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

10 ஆம் மற்றும் 11 ஆம் ஆண்டு மாண­வர்­களே இந்நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ள நிலையில் 41 மாண­வர்­களில் 32 பேர் தமது கைகளை காயப்­ப­டுத்திக் கொண்­டுள்­ள­தாக பொலிஸ் தக­வல்கள் தெரி­வித்­தன.

இவர்­களில் 7 பேர் மாண­விகள் எனவும் அந்த தக­வல்கள் சுட்­டிக்­காட்­டின. பாட­சா­லையின் உப அதிபர் மாண­வர்­களின் நடத்­தையில் சந்­தேகம் கொண்டு அவர்­களை பரி­சோ­தித்த போது கைகளில் வெட்­டுக்­காயம் ஏற்­ப­டுத்திக் கொண்­டுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து உட­ன­டி­யாக பொலி­ஸா­ருக்கு உப அதிபர் அறி­விக்­கவே பாட­சா­லைக்கு வந்த மெதி­ரி­கி­ரிய பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் என்.ஜி.எஸ். ஜயலத், மாண­வி­யரை பெற்­றோ­ரிடம் ஒப்­ப­டைத்­து­விட்டு ஏனை­யோரை பொலிஸ் நிலையம் அழைத்து சென்­றுள்ளார். மாண­வர்­களை பொலிஸார் பொலிஸ் நிலையம் அழைத்து செல்லும் போது ஒரு மாண­வனின் கையில் இருந்து அவர்கள் பயன்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் போதைப் பொருள் அடங்­கிய பை வாக­னத்­துக்கு வெளியே வீசப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து அதனை பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

பொலி­ஸா­ரினால் பொறுப்­பேற்­கப்­பட்ட மாண­வர்கள் கடு­மை­யாக எச்­ச­ரிக்­கப்­பட்டு பெற்­றோ­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் மாண­வர்கள் பயன்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் போதைப் பொருளை பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

இந்த போதைப்­பொருள் எப்­படி பாட­சா­லைக்கு கொண்டு வரப்­பட்­டது என்­பது குறித்தும் இதனை யார் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கித்­தனர் என்­பது குறித்தும் விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

நேற்று விஷேட பொலிஸ் குழு­வொன்று குறித்த பாட­சா­லைக்கு சென்று சாட்சிப் பதி­வு­களை முன்­னெ­டுத்­தி­ருந்த நிலையில் பொலன்­ன­றுவை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் லக்­சிறி விஜே­ரத்­னவின் நேரடி கட்­டுப்­பாட்டில் இது தொடர்­பி­லான மேல­திக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.