நடிகர் கமலஹாசன் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவருவதால், அவர் விரைவில் கைதுசெய்யப்படலாம் என திரைத்துறையினர் அச்சமடைந்துள்ளனர்.
மலையாள நடிகர் திலீப் நடிகை மீதான பாலியல் வன்கொடுமை புகாரில் கைது செய்ய பட்ட விவகாரத்தில் பாதிக்க பட்ட கேரளா நடிகையின் பெயரை, வெளிப்படையாக தொலைக்காட்சியில் கமல் கூறினார்.
இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து, தேசிய மகளிர் ஆணையம் நடிகர் கமலஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், தனியார் தொலைக்காட்சியில் கமலஹாசனால் நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும், தமிழர் கலாச்சாரத்தை சீரழிப்பதாகவும் அவர்மீது புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு மீது, லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை கமலஹாசன் தொடர்ந்து கூறி வருகிறார்.
இதற்காக அவர் மீது எப்போது வேடுமானாலும் கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என, திரைத்துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, நடிகர் விஷால் கூறியுள்ளதாவது:
தமிழக அரசின் திரைப்பட விருதுகள் திரையுலகை சேர்ந்தவர்களுக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கும்.
நடிகர் கமலஹாசன் ஒரு விவகாரத்தில் இறங்குகிறார் என்றால், அதை பற்றி முழுமையாக தெரிந்த பின்னரே இறங்குவார்.
அதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியினால் ஏற்படும் சர்ச்சை எல்லாம் ஒரு விஷயமே கிடையாது. கமலுக்கு ஒரு பிரச்னை என்றால், தமிழ் திரையுலகமே அவருக்கு பின் நிற்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.