இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் களமிறங்கும் மே.தீவுகளின் அதிரடி வீரர்கள்

windies3apr-720x450

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையுடனான மோதலினால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடமல் இருந்த முன்னணி வீரர்களான கிறிஸ் கெய்ல், வெயின் பிராவோ, கீரன் பொல்லார்ட், சுனில் நரைன், ஆந்ரே ரசல் ஆகியோர் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவர்களுக்கு பொதுமன்னிப்பு கொடுக்கும் வகையிலும், சமீபகாலமாக தொடர் தோல்விகளை சந்தித்துவரும் மேற்கிந்திய தீவுகள் அணியை எழுச்சிபெற வைக்கவேண்டுமென்ற நோக்கத்துடனும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை இந்த முடிவை எடுத்துள்ளது.

மேலும், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வீரர்கள் பங்கேற்கும் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரவும் முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்து அணி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 17ஆம் திகதி முதல் செப்டம்பர் 29ஆம் திகதி வரை மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஐந்து ஒருநாள் போட்டிகள், மூன்று டெஸ்ட் போட்டிகள், இரண்டு ரி-ருவென்ரி போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.