கத்திக்குத்துக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு: வாகரையில் சம்பவம்

image4-720x480

கத்திக்குத்துக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்தவர் வாரை புளியம்கந்தலடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 24 வயதுடைய ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ தினமான நேற்றிரவு வீட்டுக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு குறித்த நபர் கதவை திறந்துள்ளார். அதன்போது, ஒருவர் திடீரென அவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.