ஐக்கிய நாடுகள் பிரதிநிதி ஓர் இராணுவ அதிகாரியைப் போன்று செயற்பட்டார்! கோபத்தில் நீதியமைச்சர்

vijayathasa

ஐக்கிய நாடுகள் பிரதிநிதி ஓர் இராணுவ அதிகாரியைப் போன்று கட்டளையிடும் தோரணையில் செயற்பட்டதாகவும் அது விரும்பத்தக்க ஒன்றல்ல என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பென் எம்மர்சன் அண்மையில் இலங்கை சென்றிருந்தார். இந்நிலையில் அவரின் செயற்பாடுகள் குறித்து இன்றைய தினம் கருத்து வெளியிட்டுள்ள விஜயதாச ராஜபக்ச,

ஐக்கிய நாடுகள் பிரதிநிதி ஓர் இராணுவ அதிகாரியைப் போன்று கட்டளையிடும் தோரணையில் செயற்பட்டார். அது விரும்பத்தக்க ஒன்றல்ல.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பென் எம்மர்சன் இராஜதந்திரமற்றவர், தகுதியற்றவர்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பொய்யான தகவல்களை எம்மர்சன் வெளியிட்டுள்ளார்.

எனவே இது குறித்து நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமும் முறைப்பாட்டினை தெரிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.