பழந்தமிழ் நாட்டை ஆண்ட முவேந்தர்கலான சேர ,சோழ ,பாண்டிய மன்னர்களில் முற்கால சோழர்களின் தலைநகராக விளங்கியது திருச்சி உறையூர்.
உறையூறை ஆண்ட சோழ அரசன் ஒருவன் யானை மேல் அமர்ந்து நகர்வலம் வந்தபோது அந்த யானைக்கு திடீர் என்று மதம் பிடித்தது.
பாகனும் செய்வதறியது திகைத்தனர் .அப்போது கோழி ஒன்று ஆவேசத்தோடு குரல் எழுப்பிக்கொண்டு பட்டத்து யானையின் தலையின் மேல் நின்று தன் அலகினால் குத்தியது .
உடனே , யானை தன் மதம் அடங்கி பழைய நிலையை அடைந்தது .யானையை அடக்கிய கோழியானது தனது காலால் ஒரு இடத்தில அகழ்ந்து பார்த்தது.
அப்போது அந்த இடத்தில் ஒரு சிவ லிங்கம் கிடைத்தது .அதை ஆலயம் எடுத்து வழிபாடு செய்தான் சோழமன்னன். இதுவே உறையூர் பஞ்சவர்னேஷ்வர் திருக்கோவில்.
இக்கோவில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. இதில் சாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கிறார்.
உதங்க முனிவருக்கு இறைவன் ஐந்து காலங்களிலும் ஐந்து வண்ணங்களிலும் காட்சி தந்த தலம். கலைச் சிற்பங்கள் நிறைந்த கோவில்.
இங்கு விநாயகர், முருகர், நடராஜர் சபை, தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், திருமால் பிரமன், துர்கை, பிட்சாடனர் முதலிய சந்ததிகள் உள்ளன.
தற்போது இந்த கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டில் சைக்கிளின் மேல் ஒருவர் அமர்ந்திருப்பது போல புகைப்படங்களின் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் அன்றைய கால கட்டத்திலேயே மிதிவண்டி தமிழன் மூலம் கண்டு பிடிகப்படிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.
இருந்த போதிலும் இந்த கோவிலின் சிறப்பை அறிந்த ஆங்கிலேயர்கள், அவர்கள் காலத்தில் இந்த கல்வெட்டை செதுக்கி அங்கே வைத்ததாகவும் ஒரு தரப்பு மக்கள் கூறுகின்றனர்.
எது எவ்வாறாயினும் எங்கும் இடம்பெறாத, சிற்ப கலையின் இந்த முன்னோடியான நவீன கால கண்டுபிடிப்பின் முழுமூல வடிவே தமிழகத்தில் அமைந்திருப்பது பெருமை தானே.