சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’, தளபதி விஜய் நடித்த ‘தெறி’, சூர்யா நடித்த ‘எஸ்3’ ஆகிய படங்களின் மலேசிய ரிலீஸ் உரிமைகளை பெற்ற நிறுவனம் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே.
மேற்கண்ட மூன்று படங்களும் மலேசியாவில் நல்ல வசூலை குவித்த நிலையில் தற்போது இதே நிறுவனம் தனுஷின் ‘விஐபி 2’ படத்தின் மலேசிய ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு பெற்றுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தை இந்நிறுவனம் ‘விஐபி 2’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்களுடன் செய்துகொண்டதாக புகைப்படத்துடன் கூடிய செய்தி சமூக இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
எனவே மேற்கண்ட 3 படங்கள் போல் இந்த படமும் மலேசியாவில் நல்ல வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 28-ம் திகதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் ‘விஐபி 2’ படத்தில் தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
சீன் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சமீர் தாஹிர் ஒளிப்பதிவாளராகவும், சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.