வெளிவந்துள்ளது சிறிதரன் பேசிய முழுமையான ஓடியோ!!, தொடர்ந்தும் பச்சை “பொய்யை” கக்கிவரும் எம்.பி.சிறிதரன்!! – (வீடியோ)

• முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்து, தொடர்சியாக பொய்யை சொல்லி வருகிறார் சிறிதரன். ஒரே பொய்யை  தொடர்ந்து சொல்வதானால்..பொய் உண்மையாகிவிடாது.)

•சிறிதரன் பேசிய  முழுமையான ஓடியோ வெளிவந்து உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.  “வடக்கத்தையான்” என நான் சொல்லவில்லை,  நிரூபித்தால் பதவி துறப்பேன் என்பவர் பதவி விலகுவாரா??

• கொடுத்த வாக்கை காப்பாற்றவேண்டும் அல்லது மலையக மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.

• சிறிதரன் எப்படி  பொய்களை சொல்லி அரசியல்செய்கிறாரோ, அதேபோன்று,  சிறிதரனின் தம்பியால்  நிர்வகிக்கப்படும்  இணையதளங்களிலும்  (லங்காசிறி, தமிழ்வின்,ஜே.வி.பி…) பல செய்திகள் பொய்யாக புனைந்து பரப்பபடுகின்றன என்பதையும் தமிழ் மக்களின் கவனத்துக்கு கொண்டுவருகிறோம்.

தொடர்ந்து…………………………

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மலையக மக்களை இழிவுபடுத்தும் வகையில் தொலைபேசி உரையாடல் ஒன்றில் உரையாடியதாக   வெளியாகிய ஒலி வடிவம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதனை நிராகரிக்கும் வகையில் மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்திருக்கின்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.

இந்த நிலையில் இன்று  கிளிநொச்சியில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்சிறீதரனை கடுமையாக சாடிய மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சியில்   வாழ்ந்துவருகின்ற மக்கள், வன்செயலால்  அனைத்தையும் இழந்து தாம் இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் குடியேறியதாகவும் இவ்வாறு தெரிவித்த சம்பவமானது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கை எனவும் தெரிவித்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினரின் எதிர்கால அரசியலுக்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை எனவும் தெரிவித்திருக்கின்றனர்.

இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர், தான் அவ்வாறு தெரிவித்தமையை (“வடக்கத்தையான்” என நான் சொல்லவில்லை) நிரூபித்தால் பதவி துறப்பேன் கோணாவிலில் எதிர்ப்புத் தெரிவித்து கெள்வி எழுப்பிய மக்கள் முன்னிலையில் சிறிதரன் எம்பி தெரிவித்திருக்கின்றாா்.

ஊடகவியலாளா் ஒருவருக்கு தனது 0776913244 இலக்க தொலைபேசி ஊடாக அழைப்பை மேற்கொண்டு உரையாடியவா் இப்போது கிராமங்களுக்குச் சென்று உரையாடலில் முதலில் பேசியது தான் எனவும், ஏனைய விடயங்களை பேசவில்லை என்றும் பச்சைப் பொய் சொல்லி வருகின்றாா்.

(‘வடக்கத்தையான்’  என்ற வார்த்தையை தான் சொன்னதாக நிரூபித்தால் தான் பதவி விலகுவதாக கூறும் சிறிதரனின் வீடியோ பதிவு இதோ..

(பச்சை பொய்யை அவிழத்துவிடும் சிறிதரன்)

 

சிறிதரன் பேசிய முழுமையான ஓடியோ பதிவு கீ்ழே…கேளுங்கள் உண்மை புரியும்.

தனது கடித தலைப்பை பயன்படுத்தி போலியாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்து மறுப்பு அறிக்கையும் விட்டு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தவா்.

இந்த உரையாடல் தொடர்பில் இதுவரைக்கும் மறுப்பு அறிக்கை விடவோ அல்லது வெளியிட்டவா் மீது பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவோ இல்லை.

இதனை தவிர உரையாடலில் பின்பகுதியல் தான் அவ்வாறு குறிப்பிடவி்லலை என தெரிவிக்கும் கருத்தானது சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது.

அது தன்னுடைய உரையாடல் இல்லை என்றால் நீதிமன்ற முறைபாடு ஒன்றின் மூலம் டயலொக் நிறுவனத்திடம் இந்த உரையாடலின் ஒலிப் பதிவை பெற முடியும்.

சாதாரண மக்களே அவ்வாறு தங்களது தொலைபேசி உரையாடலை பெறுகின்ற போது ஒரு மக்கள் பிரதிநிதியால் மிகவும் இலகுவாக பெறறுக்கொள்ள முடியும்.

அதன் பின்னா் தனது ஊடகங்கள் மூலம் குறித்த உரையாடலை வெளிப்படுத்தி இதுதான் உண்மையான உரையாடல் மற்றையது பொய் என பாராளுமன்ற உறுப்பினா் நிரூபித்திருக்க வேண்டும்.

ஆனால் அவா் அதனை விடுத்து கிராமங்களில் கோவப்பபட்டு கேள்வி எழுப்பும் மக்கள் முன் அது தனது உரையாடல் இல்லை பச்சைப் பொய் கூறி வருகின்றாா்.

ஆனால் உத்தியோகபூர்வமாக இதுவரைக்கும் மறுப்புத் தெரிவிக்கவில்லை.

நகரத்தில் மலையக சமூகத்தைச் சேர்ந்த தனது அமை்பபாளர்களை அழைத்து கோபத்தில் பேசிவிட்டேன் மன்னித்துக்கொள்ளுங்கள் எனக் கூறுவதும், கிராமங்களில் அது தனது உரை இல்லை எனத் தெரிவிப்பதும் சிறிதரன் எம்பியின் உண்மை முகத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வருகிறது.

எனவே உண்மையான நேர்மையான மக்கள் பிரதிநிதி அதுவும் அந்த மக்களின் வாக்குகளாலும் வந்தவா் தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக கோருவதே சாலச் சிறந்தது.

அதனைவிடுத்து தனது கருத்தை நியாயப்படுத்தும் வகையில் மீணடும் மீணடும் பொய்களை கூறி வருவது அவரை சிறுமைப்படுத்துவதாகவே அமையும்.

…………………………….

♥ சிறிதரனின் தம்பியால்  நிர்வகிக்கப்படும்  இணையதளங்களான   (லங்காசிறி, தமிழ்வின்,ஜே.வி.பி…) போன்றவற்றில் பொய்யாக புனைந்து பிரசுரிக்கப்பட்ட   செய்திகளில் ஒரு சில கீழே….

 •பிரபாகரன் உயிருடன் இருப்பது 100% உண்மை! நோர்வே அதிரடி அறிவிப்பு

• முல்லைத்தீவு கடலில் மீண்டும் தளபதி சூசையின் படகு! சிங்கள ஊடகம் வெளியிட்ட தகவல்

தமிழ் மக்களை  தங்கள்  இணையதளங்களின்  பக்கம்  ஈர்பதற்காக   “எந்தவித ஆதாரமும்  இல்லாமல் தாங்களாகவே  ஒரு பொய்யான  செய்தியை புனைந்து, உருவாக்கி  பிரசுரித்து  விட்டு, அந்தச்   செய்தியானது  சிங்கள ஊடகம், கொழும்பு ஊடகம்  ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது என பிரசுரிக்கிறார்கள்.

சிங்கள ஊடகங்களில், கொழும்பு ஊடகங்களில் இந்தச்செய்தி வந்தது என்றால்?? அந்த  சிங்கள ஊடகம், கொழும்பு ஊடகம் எது என தெரியப்படுத்துவார்களப???

நன்றி இலக்கியா