அமெரிக்க அதிரடிப்படையின் சில உறுப்பினர்கள், தாம் சென்ற மிகவும் ஆபத்தான் தாக்குதல்கள் பற்றிய புகைப்படங்களை பேஸ் புக் ஊடாக வெளியிட்டு தற்போது பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்கள். பின் லேடனை போட்டு தள்ள முன்னர் புறப்பட்ட காட்சி, அதன் பின்னர் மீண்டு வந்த காட்சி என்று சுமார் 2,000 புகைப்படங்கள் பேஸ் புக் ஊடாக வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் சீல் படைகள் மிகவும் ரகசியமான முறையில் இயங்கி வருவது வழக்கம். சில வீரர்கள் தமது மனைவியிடம் கூட தாம் என்ன வேலை செய்கிறோம் என்பது பற்றி சொல்வது இல்லை. இன் நிலையில் அவர்கள் புகைப்படங்கள் கூட சில நண்பர்கள் ஊடாக வெளியாகி. அவர்கள் அடையாளங்களை காட்டி விட்டது. இதனால் பெரும் ஆபத்தில் அவர்கள் சிக்கலாம் என்று அமெரிக்க உளவு நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.
அமெரிக்க உளவு நிறுவனம் உடனடியாக அனைத்து படங்களையும் பேஸ் புக்கில் இருந்து நீக்கி, குறித்த கணக்குகளை வைத்திருக்கும் நபர்களின் கணக்குகளை முடக்கியும் உள்ளது.