சிறிலங்கா நீதித்துறையின் கரங்களை சட்டமா அதிபர் கட்டி வைத்திருப்பதாக சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதர்ப்புக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் குற்றம்சாட்டியுள்ளார்.
தனது சிறிலங்கா பயணத்தின் முடிவில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
சிறிலங்கா நீதித்துறையின் கரங்கள் சட்டமா அதிபர் மூலமாக கட்டி வைக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக நீதித்துறையின் அடிப்படைத் தத்துவம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு முற்றிலும் முரணானது.
எந்தவொரு பிணை மனுவையும் நிராகரிக்கும் அதிகாரம் பெற்றவராக சட்டமா அதிபர் இருக்கிறார். இந்த நடைமுறை இன்னமும் சிறிலங்காவில் உள்ளது. என்றும் அவர் கூறியுள்ளா