ஹோட்டலுக்குள் 1000 இளைஞர், யுவதிகள் உல்லாசம்? சுற்றிவளைத்த கிராம மக்களால் பதற்றம்

hotel

ஜாஎல பிரதேச சுற்றுலா ஹோட்டலில் இடம்பெற்ற விருந்து தொடர்பில் பதற்றமான நிலை காணப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இளைஞர்கள், யுவதிகள் இணைந்து இன்று நடத்திய விருந்து நிகழ்வொன்றுக்கு கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

வெளிப்புறத்தில் இருந்து வந்த இளைஞர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருந்தில் சுமார் 1000 இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர். அவர்களில் கர்ப்பிணி தாயார் ஒருவரும் உள்ளடங்கியுள்ளார்.

எனினும் இது போதைப்பொருள் பயன்படுத்தும் விருந்து எனவும், போதை மாத்திரைகள் அங்கு பயன்படுத்தப்படுவதாகவும் கூறி கிராம மக்கள் குற்றம் சுமத்தியதோடு அந்த ஹோட்டலை சுற்றி வளைத்துள்ளனர்.

இதன் போது விருந்திற்கு வந்த இளைஞர் யுவதிகள் சிலர் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் அந்த ஹோட்டலுக்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் அங்கு போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என சோதனை செய்துள்ளனர். எனினும் அந்த குழுவினருக்குள் எவ்வித பதற்றமான தன்மை ஒன்றும் காணப்படவில்லை.

எப்படியிருப்பினும் இந்த நாட்களில் பேஸ்புக் நண்பர்கள் இணைந்து ஏற்பாடு செய்யும் விருந்துகளின் போது நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து பலர் கலந்து கொள்வதாக இந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அந்த இளைஞர்களிடம் வினவிய போது அவர்கள் அது உண்மை என உறுதி செய்துள்ளனர்.

எப்படியிருப்பினும் தற்போது வரை இந்த சம்பவம் தொடர்பில் ஒருவரும் கைது செய்யப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.