போதை பொருள் விவகாரத்தில் ஏற்கெனவே தெலுங்கு திரையுலகின் முக்கிய நடிகர், நடிகைகள் சிக்கி இருக்கும் நிலையில் தற்போது பாகுபலி புகழ் ராணாவுக்கு இதில் தொடர்பு உள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனையடுத்து ராணா மற்றும் அவரது சகோதரர் அபிராமுக்கும் ஆந்திர போதை பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். முன்னதாக போதை பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய நபர்கள் அளித்த தகவலின்பேரிலேயே இந்த அதிரடி நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
நோட்டீஸ் அடிப்படையில் ஆஜராகும் நடிகர், நடிகைகளிடம் தீவிர விசாரணை நடத்த ஆந்திர போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விசாரணையின் முடிவில் இந்த விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஆந்திர திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.