தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குமிடையிலான சந்திப்பு இந்த வார இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது
பெரும்பாலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருநாள் கொழும்பில் இருவரும் சந்தித்துப் பேசுவர் என அறியமுடிகின்றது.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதிர்வரும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பில் நிற்பார் எனக் கூறப்படுகின்றது.
அந்தவேளையில், பெரும்பாலும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையன்று கொழும்பு இசுப்பத்தான வீதியிலுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி கனக ஈஸ்வரனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையில் ஆளும் தரப்புக்குள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பில் இந்தச் சந்திப்பில் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.