சான்பிரான்சிஸ்கோ:
ஆப்பிள் நிறுவனத்தின் 2017 ஐபோன் வடிவமைப்பு சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. ஏற்கனவே ஐபோன் 2017 வடிவமைப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், இம்முறை கசிந்துள்ள தகவல்கள் ஃபோர்ப்ஸ் மூலம் வெளியாகியுள்ளது.
ஐபோன் கேஸ் வடிவமைப்பாளரான நொடஸ்-இல் பணியாற்றி வந்த ஃபோர்ப்ஸ்-இன் கார்டன் கெல்லி ஐபோன் 8 வடிவமைப்பு தகவல்களை ஒருங்கிணைத்துள்ளார். இம்முறை வெளியாகியுள்ள தகவல்கள் விநியோக நிறுவனத்தில் இருந்து கிடைத்த கேட் ஃபைல்களை சார்ந்து உருவாக்கப்பட்டுளஅளது. தற்சமயம் நொடஸ் ஐபோன் 8 கேஸ்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், இம்முறை வெளியாகியுள்ள தகவல்களின் ஐபோன் 8 பெசல் லெஸ் வடிவமைப்பு கொண்ட டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆப்பிள் வல்லுநரான மிங் சி-கியோ ஐபோன் 8-இல் அதிகப்படியான ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கும் என தெரிவித்திருந்தார்.
5.8 இன்ச் டிஸ்ப்ளே, முன்பக்க கேமரா, சென்சார் உள்ளிட்டவற்றிற்கு சிறிது இடம் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. கூடுதலாக ஐபோன் 8-இல் சரிந்தநிலை இரட்டை கேமரா அமைப்பு, மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதி உள்ளிட்டவை வழங்கப்படலாம். இதன் லைட்னிங் போர்ட் எவ்வித மாற்றமும் வழங்கப்படாமல் ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.
இதனால் டச் ஐடி டிஸ்ப்ளேவினுள் வழங்கப்படலாம் அல்லது ஹோம் பட்டனில் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சோனி எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்களில் கைரேகை ஸ்கேனர் பவர் பட்டனுடன் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் முன்பக்க 3டி ஸ்கேனர் மாட்யூல் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆப்பிள் ஐபோன் 8 செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் இத்துன் ஐபோன் 7எஸ், ஐபோன் 7எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 8 விலை 1000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.64,000 முதல் துவங்கும் என கூறப்படுகிறது.