யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து சென்ற மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளும் சுன்னாகம் பொலிஸாரும் இணைந்து நடத்திய திடீர் சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுன்னாகம் மயிலினி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
மின்மானியின் வயரினை சேதப்படுத்தி மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் திருட்டு மின்சாரம் பெற்ற ஒருவர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.