மாத்தளை மாவட்டத்தில் லக்கல, வில்கமுவ, நாவுல, அம்பங்கஸ்க ஆகிய நான்கு பிரதேச செயலகப் பிரிவிலேயே மிகச் சிறு வயதில் கர்ப்பம் தரிக்கும் சிறுமிகள் அதிகம் உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்துள்ளார்.
மாத்தளை செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் போதே அவர் மேற்படி விபரங்களை முன்வைத்துள்ளார்.
சிறு வயதில் கர்ப்பம் தரிக்கும் சிறுமிகள் குறித்து அரசாங்கம் கூடிய கவனம் எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் சுகாதார அமைச்சு முன்னெடுத்திருந்த ஆய்வின் போதே இந்த அதிர்ச்சித் தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குடும்பச் சூழல், கல்வி அறிவின்மை என்பவையே இதற்கு காரணம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக பெண்கள் மற்றும் சிறுவர் பராமரிப்பு பிரிவினருக்கு அறிவித்து அவர்கள் மூலம் குறிப்பிட்ட பிரதேசங்களில் விழிப்புணர்வு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதென மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.