குவைத்தில் விரட்டிப் பிடிக்கப்பட்ட இலங்கையர்கள் ; காரணம் என்ன?

kuvaith

ஜூலை மாதம் முதல் வாரத்தில் குவைத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் 31 576 போக்குவரத்து விதிமீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் பொலிஸாரால் 1033 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 68 பேர் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

போக்குவரத்தில் ஈடுபட்டபோது போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் கடத்திய குற்றச்சாட்டில் இலங்கை தம்பதி மற்றும் எகிப்து நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பர்வேனா பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது பொலிஸாரின் காரை கண்ட இலங்கைத் தம்பதி அங்கிருந்து தப்பி செல்ல முயற்சித்துள்ளனர். எனினும் பின்னால் துரத்தி சென்று பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் வேலைத்திட்டம் குவைத் முழுவதும் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கைது செய்யப்பட்ட இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.